அலையே !

Author: Aarthi@Paperandme / Labels:


அலையே! ஓயா அலையே!
நீ யாருக்கு சொந்தம்?
உன்னை மெல்ல எழுப்பும் கடலுக்கா?
வரவேற்று அடைக்கலம் தரும் கரைக்கா?
கால் நனைத்து மகிழும் எனக்கா?

மனிதா! புதிர் கொண்ட மனிதா!
கடலிடம், என்னை மெல்ல எழுப்பசொல்லி,
கரையிடம், எனக்கு அடைக்கலம் தரச்சொல்லி,
என்னை இயற்றியவனுக்கே நான் சொந்தம்!